நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை, ட்யூட் விக்கி என்பவர் இயக்கி உள்ளார். இவர் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர்.
சான் ரோல்டன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். மிக விரைவில் படம் திரைகாணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா நடிப்பில் உருவான ‘அன்னபூரணி’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ வெற்றி பெறும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

