கணவர், குழந்தைகளுடன் தாய்லாந்து பறந்த நயன்தாரா

கணவர், குழந்தைகளுடன் தாய்லாந்து பறந்த நயன்தாரா

1 mins read
6d9ecad4-07c9-4446-9ca9-f8faa24c7953
கணவர், குழந்தைகளுடன் நயன்தாரா. - படம்: ஊடகம்

நடிகை நயன்தாரா திடீரென தனது கணவர், குழந்தைகளுடன் தாய்லாந்துக்குப் பறந்திருக்கிறார்.

இடைவிடாத படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைத்த ஓய்வு நேரம் இப்பயணத்தை சாத்தியமாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் சுற்றிப்பார்த்த இடங்கள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகளை தனது சமூக ஊடக பக்கங்களில் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.

மேலும், “உயிர், உலக் ஆகிய எனது இரு மகன்களும்தான் என் வாழ்வின் ஆன்மா, இதயம்,” என்றும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஆண்டுதோறும் இவ்வாறு மூன்று பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என நயன்தாரா திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு படப்பிடிப்பில் பங்கேற்கும்போது கூடுதல் உற்சாகம் ஏற்படுவதாகவும் அவர் கூறுகிறார். நயன்தாரா பதிவில் உள்ள புகைப்படங்களை ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்