தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘டீப் ஃபேக்’ காணொளி: கண்டுகொள்ளாத ராஷ்மிகா

1 mins read
9b545821-99ea-457a-b7dc-f548e76388a7
ராஷ்மிகா. - படம்: ஊடகம்

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொளி ஒன்று மீண்டும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் இதை அறவே கண்டுகொள்ளவில்லை.

அண்மைக் காலமாக பிரபலங்களின் புகைப்படங்கள், காணொளிகளை நவீன தொழில் நுட்பத்தின் மூலம் மாற்றி வெளியிடுவது வழக்கமாகி உள்ளது.

‘டீப் ஃபேக்’ தொழில் நுட்பத்தின் மூலம் சிலர் இந்த தகாத செயலில் ஈடுபடுகின்றனர்.

ராஷ்மிகா மட்டுமின்றி, நடிகைகள் ஆலியா பட், கஜோல், கத்ரினா கைஃப் உள்ளிட்ட பலரின் ‘டீப் ஃபேக்’ காணொளி அடுத்தடுத்து வெளியாகின.

இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில், ராஷ்மிகாவின் இரண்டாவது ‘டீப் ஃபேக்’ காணொளி மீண்டும் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்