‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தனது தந்தை கமல்ஹாசனைக் கொண்டாடும் வகையில் சிறு இசை நிகழ்ச்சி ஒன்றை அரங்கேற்றினார் ஷ்ருதி ஹாசன்.
இதற்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், இன்ஸ்டகிராமில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் ஸ்ருதி.
தனது தந்தையின் திரை வாழ்க்கையைக் கௌரவப்படுத்துவது என்பது தமக்குக் கிடைத்த பாக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இசையால் தன் தந்தையைப் பாராட்டுவது தமக்கு கிடைத்த பெருமை என்றும் கூறியுள்ளார்.
“அவரது திரைப்படங்களில் ஒலித்த வெற்றிப்பாடல்களை திறம்பட ஒருங்கிணைத்து, ஒரு அற்புதமான மெல்லிசைக் கோர்வையை உருவாக்கியது அருமையான பணி. இதில் எனக்கு உதவியவர்களுக்கு மிக்க நன்றி.
“நான் மேடையில் நடனம் ஆடியபடியே பாடியபோது என் தந்தையின் வசீகரச் சிரிப்பைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அப்பாவின் அன்பும் ஆதரவும்தான் என்னை இசையமைப்பாளராக வளர்த்துள்ளது,” என்று தெரிவித்துள்ளார் ஷ்ருதி ஹாசன்.