ஸ்ரீகௌரி: புது வாய்ப்புகள், சொந்தங்கள் கிடைத்துள்ளன

ஸ்ரீகௌரி: புது வாய்ப்புகள், சொந்தங்கள் கிடைத்துள்ளன

3 mins read
97a4943d-8e1b-430a-ad4b-59fe4c1ce796
ஸ்ரீ கௌரி. - படம்: ஊடகம்

தமிழ் சினிமாவில் அண்மையில் அறிமுகமான ஸ்ரீகௌரி பிரியா தனக்குரிய நல்ல வாய்ப்புகள் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

‘இவ பந்தய புறா’ என்ற பாட்டு ஒலித்தாலே ரசிகர்களுக்கு தனது முகம் நினைவில் வந்து போவதாக சொல்லி பெருமிதம் கொள்கிறார்.

“அப்பா, நான் என எங்கள் வீட்டில் இரண்டு பேர் மட்டுமே இருக்கிறோம். அப்பாவுக்கு என் மீது அளவு கடந்த பாசமும் நம்பிக்கையும் உள்ளது. பள்ளிப் படிப்பின்போதே பாரம்பரிய இசையைக் கற்றுக்கொள்ள தொடங்கினேன். பள்ளி அளவிலான அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியாளர் பட்டியலில் கண்டிப்பாக எனது பெயரும் இடம் பெற்று இருக்கும்.

“எனது சொந்த ஊரான ஹைதராபாத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற அழகிப் போட்டியில் முதலிடம் பிடித்தேன். ’மிஸ் ஹைதராபாத்’ விருதைப் பெற்ற பிறகு எனது புதிய வாழ்க்கையின் பயணம் தொடங்கியது. எனினும் நீண்ட நாள்களுக்கு என் மகிழ்ச்சி நீடிக்கவில்லை,” என்று சோகத்துடன் சொல்கிறார் ஸ்ரீகௌரி.

இவர் அழகிப் பட்டம் கிடைத்த உற்சாகத்தில் விளம்பரங்களிலும் திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வரும் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில், கொரோனா கிருமி தொற்றுதான் வந்து சேர்ந்ததாம்.

தன்னையும், தன் தந்தையையும் கொரோனா தொற்று வீட்டிலேயே முடக்கிப்போட்டது என்கிறார் ஸ்ரீகௌரி. எனினும் நெருக்கடி வேளையிலும் இரண்டு தெலுங்கு இணையத் தொடர்களில் நடித்து முடித்தாராம்.

“அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. இந்த சமயத்தில் ’மாடர்ன் லவ் சென்னை’ என்ற இணையத் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் ‘லாலாகுண்ட பொம்மை’ என்ற பகுதியில் ‘இவ பந்தய புறா’ என்ற பாடல் இடம் பெற்று இருந்தது. அதற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

“தமிழ் ரசிகர்கள் இந்த அளவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. வெளியே சென்றால் என்னை அடையாளம் கண்டு பாசத்துடன் பேசுகிறார்கள். அவர்களுடன் உரையாடும்போது புதிய சொந்தங்கள் கிடைத்தது போல் உணர்கிறேன்,” என்கிறார் ஸ்ரீகௌரி.

தொடர்புடைய செய்திகள்

தமிழில் இவர் நடித்து வெளீயிடு கண்ட ‘லவ்வர்’ திரைப்படம் விமர்சனம், வசூல் ரீதியில் சாதித்துள்ளது. அதன் பலனாக, பல நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.

“அந்தப் படத்தில் நடித்தபோது எனக்குத் தமிழில் சரளமாகப் பேச வராது. அந்த சமயத்தில் படத்தின் நாயகன் மணிகண்டனும் இயக்குநரும் பெரிதும் உதவினர். எப்படியாவது என்னை தமிழில் பேச வைக்க இருவரும் படாதபாடு பட்டதை இப்போது நன்றியுடன் நினைவுகூர்கிறேன்,” என்கிறார் ஸ்ரீகௌரி.

தற்போது சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வரும் நடிகர், நடிகையரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், நடிகைகள் வாணி போஜன், ரோஷினி, அறந்தாங்கி நிஷா, கவின் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இந்தப் பட்டியலில் சிவகார்த்தி கேயனுக்கும் சந்தானத்துக்கும் முதன்மை இடம் உள்ளது.

மீண்டும் சின்னத்திரையில் நடிப்பீர்களா, எத்தனை படங்களில் நடிக்கிறீர்கள் என்பன போன்ற கேள்விகளை ஸ்ரீகௌரி கண்டுகொள்வதில்லை.

நன்றாக நடித்தால் உரிய வாய்ப்புகள் தன்னால் தேடி வரும் என்கிறார்.

“வாணி போஜனுக்கு எந்தப் பின்புலமும் இல்லாத நிலையில், திரையுலகில் அறிமுகமாகி சாதித்து வருகிறார். அவரைப் போன்றோரை ஸ்ரீகௌரி பின்பற்ற வேண்டும்,” என்று கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்