பல ஆண்டுகள் கனவு கண்டேன்: அஞ்சலி

பல ஆண்டுகள் கனவு கண்டேன்: அஞ்சலி

1 mins read
ed1561f1-442c-4966-b5d2-8e42d1bab34d
அஞ்சலி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான அஞ்சலி, தற்போது 50 படங்களை நெருங்கிவிட்டார்.

அவரது நடிப்பில் உருவாகும் 50வது படத்துக்கு ‘ஈகை’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் அசோக் வேலாயுதம் இயக்குகிறார். இது நாயகியை முன்னிலைப்படுத்தும் கதையைக் கொண்டு உருவாகின்றது.

தெலுங்கில் சங்கர், ராம் சரண் கூட்டணியில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து முடித்துள்ள அஞ்சலி, இந்த ஆண்டு இறுதி வரை புதுப் படங்களில் நடிக்க நாள்களை ஒதுக்க முடியாத நெருக்கடியில் உள்ளாராம். ஓய்வின்றி நடிக்க வேண்டும் என்றுதான் பல ஆண்டுகளாக கனவு கண்டு வருகிறேன் என்கிறார் அஞ்சலி.

குறிப்புச் சொற்கள்