மீண்டும் திரைப்படங்களில் நடிக்கிறார் நடிகை விஜயசாந்தி.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2020ஆம் ஆண்டு தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஒரு படத்தில் நடித்தார்.
இதையடுத்து தற்போது தெலுங்கு நடிகர் கல்யாண் ராம் நடித்து வரும் படத்தில் விஜயசாந்தியும் இணைந்துள்ளார்.
இதில் அவருக்கு ஐபிஎஸ் அதிகாரி வேடமாம். விஜய சாந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது அறிமுகக் காணொளியை இப்படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

