நடிகர் விஜய்யின் பிறந்த நாளுக்கு அடுத்த நாளான ஜூன் 23ஆம் தேதியில் நடிகை திரிஷா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்தப் புகைப்படம் இதுவரை இணையத்தில் வெளியாகாத புகைப்படம் என்பதால், அந்தப் புகைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன.
திரிஷா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன. இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரத்தில் இப்போது இதுதான் பேசும் பொருளாக மாறியுள்ளது.
தனது எக்ஸ் பக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் விருது பெறும்போது எடுத்த புகைப்படத்தை திரிஷா முகப்பு பக்கத்தில் அட்டைப் படமாக வைத்துள்ளதும் விஜய்யின் அலுவலகம் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் திரிஷா வீடு ஒன்றை வாங்கியுள்ளதும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

