தாம் எதிர்மறையாக என்ன நினைத்தாலும், அது உடனடியாக நடந்துவிடும் என்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
தமது காதலர் திடீரெனத் தம்மை ஏமாற்றிவிட்டு, காதலை முறித்துக் கொள்வதுபோல் கனவு கண்டாராம்.
அது உண்மையாகவே நடந்துவிட்டது என்று ஒரு பேட்டியில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
“நானும் என் காதலரும் நன்றாகத்தான் பேசிப் பழகி வந்தோம். ஆனால் அவரோ திடீரென இன்னொரு பெண்ணைக் காதலிப்பதாக கூறிச் சென்றுவிட்டார்.
“நான் இப்போது வைத்துள்ள கார்கூட ஒரு கனவு கண்ட பின்னர் வாங்கியதுதான். கார் முதல், எதிர்காலத்தில் வாங்க விரும்பும் பொருள்கள் வரை அனைத்தையும் கற்பனை செய்து வைத்துள்ளேன். அதன்படியே நடந்து வருகிறது,” என்கிறார் நிவேதா பெத்துராஜ்.

