இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜனின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது. இதில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், இந்தப்படம் குறித்து தம்முடன் பேச வேண்டி இருப்பதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“நான் எப்போது அழைத்தாலும் என்னுடன் பேசுவதற்குத் தயார் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அது மட்டுமல்ல, இப்படத்தை தாமே தயாரிக்கவும் அவர் முன்வந்துள்ளார்.
“தற்போது சில போட்டித் தொடர்களில் நான் பங்கேற்றுள்ளேன். அவை முடிந்தவுடன் சிவகார்த்திகேயனை நேரில் சந்திப்பேன்,” என்றார் நடராஜன்.

