சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் தமிழ் பெயர்ப் பலகைகள் அவசியம் என தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு நாள் விழாவையொட்டி நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், ஆண்டுதோறும் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ஆம் தேதியை தமிழக அரசு சிறப்பாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டார்.
தமிழ் வளர்ச்சித்துறையும் தொழிலாளர் நலத்துறையும் இணைந்து வணிக நிறுவனங்கள் தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன.
இதை அனைத்து வணிகர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

