தென்னிந்திய மொழிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் பூஜா ஹெக்டே.
இதனால் இந்தியில் வாய்ப்பு இல்லாதபோது தமிழ், தெலுங்கு மொழிப் படங்களை ஒப்புக்கொள்கிறார்.
அந்த வகையில் பூஜா தற்போது நடித்துவரும் ‘தேவா’ தெலுங்குப்படம் விரைவில் திரை காண உள்ளது. படம் தயாராகிவிட்டாலும் சற்றே காத்திருந்து 2025 காதலர் தினத்தன்று வெளியிடலாம் என தயாரிப்புத் தரப்பிடம் கூறியுள்ளாராம் பூஜா.
‘தேவா’ படத்தில் ஷாகித் கபூர் நாயகனாக நடிக்க, மலையாள தயாரிப்பாளர் ரோஷன் ஆண்த்ருஸ் இயக்கியுள்ளார். இது முழு நீள திகில் படமாக உருவாகிறது.
ஷாகித் கபூர் காவல்துறை அதிகாரியாகவும் பூஜா செய்தியாளராகவும் நடித்துள்ளனர்.
“தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வருகிறேன். என் மீது அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர். அவர்களைப் போன்றவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டுள்ளேன்.
“அதை எனது நடிப்பிலும் வெளிப்படுத்தி உள்ளேன்,” என்று சொல்லும் பூஜா ஹெக்டே, தமிழில், சூர்யாவின் 44வது படத்தில் நடித்து வருகிறார்.