தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெருக்கமான காட்சிகளைத் தவிர்த்ததால் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன்: மிருணாள் தாகூர்

2 mins read
64b62e63-c557-4377-b485-5289b01c1761
நடிகை மிருணாள் தாகூர். - படம்: ஊடகம்

நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது அசெளகரியமாக உணர்ந்ததால், பல பட வாய்ப்புகள் தனது கைநழுவிப் போயுள்ளதாக வருத்தப்படுகிறார் நடிகை மிருணாள் தாகூர்.

இந்தியில் சின்னத்திரை நடிகையாகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று இந்தி, மராத்தி, தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

2022ல் தெலுங்கு மொழியில் ‘சீதா ராமம்’ படத்தில் துல்கர் சல்மானின் ஜோடியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார் மிருணாள். அவரது முதல் படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

தனது காதல் ததும்பும் நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ள மிருணாள் தாகூர், தனது 32வது பிறந்தநாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) கொண்டாடினார். அவருக்கு திரையுலகப் பிரமுகர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

காதலை மையப்படுத்தி ஒரு படம் எடுக்கவேண்டுமெனில், “தூக்கிட்டு வாங்கடா செல்லத்த” என ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு மிகவும் பிடித்தமான நடிகைகள் பட்டியலில் மிருணாள் இடம்பிடித்துள்ளார்.

‘சீதா ராமம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான சைமா விருதினை ஒரு வாரத்திற்கு முன்னர்தான் மிருணாள் பெற்றுள்ளார்.

இன்ஸ்டகிராம் பக்கத்தில் மட்டும் மிருணாளை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

மிகவும் திறமையான, தைரியமான பெண்ணாக இருப்பதால் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு உடல்நலத்தைப் பேணுவது தொடர்பான அறிவுரைகளையும் அவர் கூறிவருகிறார்.

ஒரு படத்திற்கு ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கும் மிருணாளின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.33 கோடி என செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இவரின் சொத்து மதிப்பு கடகடவென உயர்ந்துள்ளது. படங்களில் நடிப்பது மட்டுமன்றி விளம்பரங்களில் நடித்தும் தனது வருமானத்தைப் பெருக்கி வருகிறார்.

ஆடம்பர வாழ்க்கை மீது தனக்கு பெரிய ஆர்வம் இல்லை என்று கூறும் அவர், ஊர் சுற்றும் பிரியையாக இருந்து வருகிறார். மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார்.

இவர் அளித்துள்ள பேட்டியில், காதல் காட்சிகள் , முத்தக் காட்சிகளில் நடிக்கும்போது எனக்கு அது மிகவும் அசௌகரியமாக இருக்கும். என் பெற்றோரும் இதுபோல் நடிப்பதைத் தவிர்த்துவிடும்படி கூறியுள்ளனர். இதனால் பல படங்களில் நான் நடிக்கமுடியாமல் போயுள்ளது.

ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, அந்தப் படத்தில் முத்தக்காட்சிகள் இருந்ததால் அதிலிருந்து விலகினேன். இதேபோல், நெருக்கமான காட்சிகள் இருந்த பல படங்களை நிராகரித்துள்ளேன். அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பதற்குப் பயந்ததே அதற்குக் காரணம்.

ஆனால், ஒரு நடிகையாக இதுபோல் நடிக்காமல் இருக்கமுடியாது என்பதால் என் பெற்றோரிடம் “இந்தக் காட்சிகளை எல்லாம் தவிர்க்கமுடியாது. அவை படத்திற்குத் தேவையான ஒன்று,” என்று விளக்கிய பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன் என்கிறார் மிருணாள்.

குறிப்புச் சொற்கள்