படிக்க பணமில்லாததால் நடிக்க வந்தேன்: சமந்தா

1 mins read
c78ef54e-7e66-4071-ad58-2bc3227a061e
நடிகை சமந்தா. - படம்: ஊடகம்

தனது படிப்புக்கு பணம் இல்லாத சூழ்நிலையில் திரையுலகுக்குள் அடியெடுத்து வைத்ததாக நடிகை சமந்தா கூறியுள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவுக்கு தமிழ், தெலுங்குத் திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அண்மையில், ‘காபி வித் கரண் சீசன் 7’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தாவிடம், தொகுப்பாளர் கரண் ஜோஹர் “சினிமாவை ஏன், எதற்காகத் தேர்ந்தெடுத்தீர்கள்?” எனக் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த சமந்தா, “ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த எனக்குப் படிப்பை மேற்கொண்டு தொடரும் வழி தெரியவில்லை. என் மேல் படிப்பிற்கான பணத்தைச் செலுத்தமுடியாது என்று என் தந்தை கூறிவிட்டார். அதனால்தான் வேறு வழி தெரியாமல் திரையுலகில் நுழையவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

அதன்பின்னர் திரையுலகத்தால் எனது வாழ்க்கை இப்போது முற்றிலும் ஒரு நல்ல நிலைமைக்கு மாறியுள்ளது,” என்று கூறியுள்ளார்.

தற்போது, சமந்தா மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்திலும் ஷாருக்கானுடன் இந்தியில் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். மேலும், நடிகர் வருண் தவானுடன் இணைந்து ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்