பெருமாச்சி மண்ணைக் காக்க போராடுபவராக மிரட்டும் சூர்யா

1 mins read
511cf216-00f8-47f9-88b3-0a7f1cb4c508
 ‘கங்குவா’ படக் காட்சியில் நடிகர் சூர்யா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில், இப்படத்தின் ‘டிரைலர்’ இணையத்தில் பரவி வருகிறது. இதில், பெருமாச்சி மண்ணைக் காக்க போராடுபவராக வித்தியாசமான வேடத்தில் சூர்யா மிரட்டியுள்ளார். பாபி தியோல்-சூர்யா இடையேயான சண்டை காட்சிகள்தான் முக்கியமாக இடம்பிடித்துள்ளன.

கிராபிக்ஸ் காட்சிகள், சூர்யாவின் அட்டகாசமான நடிப்பு, வில்லன் பாபி தியோலின் ஆக்ரோஷம் உள்ளிட்ட அனைத்துக் காட்சிகளும் புல்லரிக்கச் செய்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரூ.350 கோடி செலவில், 3டி தொழில்நுட்பத்தில் வரலாறு கலந்த படமாக உருவாகியிருக்கும் ‘கங்குவா’ பத்து மொழிகளில் வெளியாகிறது.

குறிப்புச் சொற்கள்