பிரபல நடிகை ஜோதிகா, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தற்போது தமிழ், மலையாளம், இந்தியில் நடித்து வருகிறார்.
அண்மையில் ‘காதல் தி கோர்’ ‘சைத்தான்’ ஸ்ரீகாந்த் ஆகிய படங்களில் நடித்தார் ஜோதிகா. மூன்று படங்களுமே நல்ல வரவேற்பைப் பெற்றதால் ஜோதிகாவுக்கு இந்திப் பட வாய்ப்புகள் வருகின்றன.
அதனால் உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வதில் ஜோதிகா அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தான் உடற்பயிற்சி செய்யும் காணொளியை பதிவிட்டு, “இந்த சுதந்திர நாளிலிருந்து உண்மையாகவே தற்சார்புடையவர்களாக மாறுவோம்” எனக் கூறியுள்ளார் ஜோதிகா .
ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகு உடல் எடை கூடியதால் தற்போது அதைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார் ஜோதிகா.

