பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், ‘சர்தார் 2’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கார்த்தி. அண்மையில் இப்படக்குழு தாய்லாந்து சென்று, அங்கு முக்கியமான சண்டைக் காட்சிகளைப் படமாக்கித் திரும்பியுள்ளது.
மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்திருப்பதால், தீபாவளிக்கு படத்தைத் திரையிடத் திட்டமிட்டுள்ளார்களாம். அதனால், பின்னணி இசை, வசனப் பதிவு உள்ளிட்ட பணிகளும் ஒருசேர நடந்து வருகின்றன.
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படைப்பான ‘வா வாத்தியார்’ படத்துக்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளதாம். அதனால், அதை முதலில் முடித்து, வெகு விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.