விஜய் தொலைக்காட்சியில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளும் தொடர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அவற்றுள் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியும் ஒன்று.
இந்நிலையில் இதன் ஐந்தாவது சீசனில் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரியங்கா வெற்றி பெற்றுள்ளார்.
அண்மையில் இவருக்கும் மற்றொரு தொகுப்பாளரான மணிமேகலைக்கும் இடையே மோதல் வெடித்தது.
இது குறித்து சமூக ஊடகங்களில் பலர் தீவிரமாக விவாதித்தனர். இதனால் இருதரப்பு ரசிகர்களும் கருத்து ரீதியில் மோதி வந்தனர்.
இந்நிலையில், தனது வெற்றி குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா.
அதில், தன்னைச்சுற்றி இருப்பவர்களை எப்போதுமே சௌகர்யமாக உணர வைப்பதில் தாம் பெருமிதம் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எனக்கு கடின உழைப்பைக் கற்றுக்கொடுத்த குடும்பத்தாருக்கு நன்றி. இந்தப் பயணத்தில் என்னை ஊக்குவிப்பவர்களுக்கும் ஆதரவு அளித்தவர்களுக்கும் நன்றி.
“எனக்காக கண்ணீர்விட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“நான் தினமும் காலையில் எழுவதற்கு நீங்கள்தான் காரணம். உங்களை அனைத்து வழிகளிலும் மகிழ்விப்பேன்,” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் பிரியங்கா.