கோடைக் காலத்தில் பொதுமக்கள் தங்கள் உடல்நலனைப் பாதுகாப்பதுடன், மற்ற உயிரினங்களுக்கும் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் நடிகர் சூரி.
சென்னையில் ஏழு இடங்களில் குடிநீர் பந்தல்ககளை திறந்து வைத்த அவர், பொதுமக்களுக்கு நீர் மோர், பழ வகைகளையும் வழங்கினார்.
அப்போது பேசிய அவர், பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் மிகவும் முக்கியம் என்றார்.
“எனவே, உங்களால் முடிந்தவரை வீட்டின் வாசல், சன்னல், மாடம் என பல இடங்களில் பறவைகளுக்காக கொஞ்சம் தண்ணீர் எடுத்து வையுங்கள்.
“கோடைக் காலத்தில் பறவைகளும் தங்கள் தாகத்தைத் தணித்துக்கொள்ள முடியும்,” என்று வேண்டுகோள் வைத்தார் சூரி.