‘யார் எந்தப் பக்கம் போனால் எனக்கென்ன, என் வழி தனி வழி’ என்கிறார் நடிகை தமன்னா.
என்னதான் தமிழிலும் தெலுங்கிலும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும், இந்தித் திரையுலகம் தொடர்ந்து அவரை அரவணைத்து வருகிறது.
கடந்த மே மாதம் இந்தியில் வெளியான ‘ரெய்டு-2’ படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடியிருந்த தமன்னா, தற்போது இந்தி இயக்குநர் சாந்தாராமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகை ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து, ஷாஹித் கபூரின் ‘ஓரோமியோ’ படத்திலும் ரோகித் ஷெட்டி இயக்கும் படம் உட்பட ஐந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
மேலும், தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்திலும் தன்னைப் பார்க்க முடியும் என்கிறார் தமன்னா.
இதற்கிடையே, மீண்டும் ஒற்றைப் பாடலுக்கு ஆடக்கேட்டு தமிழ் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறார்களாம். ஆனால், தமன்னா தமிழில் மட்டும் அத்தகைய வாய்ப்புகளை ஏற்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாகத் தகவல்.

