இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார் நடிகை தமன்னா.
கடைசியாக 2024ஆம் ஆண்டு வெளிவந்த ‘அரண்மனை-4’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தமன்னாவை அதன்பிறகு தமிழ்ப் படங்களில் பார்க்க முடியவில்லை. தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் கிடைத்ததால் அந்தப் பக்கம் நகர்ந்துவிட்டார்.
இந்நிலையில், சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ படத்தில் தமன்னாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இப்படத்தின் அறிமுகக் காணொளி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியான வேகத்தில் அந்தக் காணொளி ஒன்பது மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
“இதற்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடித்த ‘ஆக்ஷன்’ படம் வெற்றி பெறவில்லை.
“இந்நிலையில் அவ்வப்போது இடைவெளி விட்டுத்தான் தமிழில் நடிக்கிறேன். இது உண்மைதான். எனினும், 20 ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் தாக்குப்பிடித்ததே பெருஞ்சாதனை எனக் கருதுகிறேன்,” என்கிறார் தமன்னா.

