தமன்னாவைப் பொறுத்தவரை இப்போதுதான் அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்ல வாய்ப்புகள் அமைகின்றனவாம். அந்த வகையில் விரைவில் சல்மான் கானுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘நோ என்ட்ரி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
முதல் பாகத்தில் சல்மான்கான் நாயகனாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனராம். அவர்களில் ஒருவராக தமன்னா இணைந்துள்ளதாகத் தகவல்.
மேலும், அதிதி ராவ், ஷ்ரத்தா கபூர், மனுஷி சில்லர், பிருத்விராஜ் உள்ளிட்டோரும் உள்ளனர். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமன்னா தற்போது ‘ஒடேலா 2’ படத்தில் நடித்திருக்கிறார். அண்மையில் வெளியீடு கண்ட இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையே, அஜய் தேவ்கனின் ‘ரெய்டு 2’ படத்தில் ஒரு பாடலுக்கும் தமன்னா நடனமாடி இருக்கிறார்.