சுயசரிதையை எழுத ரஜினிக்கு உதவும் தமிழ் இயக்குநர்

சுயசரிதையை எழுத ரஜினிக்கு உதவும் தமிழ் இயக்குநர்

1 mins read
ea37b7bc-2950-4c2c-9c4e-a0f1e775c7f0
 ‘ஏஐ’ மூலம் ரஜினியை நல்லகண்ணுவாகச் சித்திரிக்கும் படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. - படம்: விகடன்

ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதி வருவது தெரியும். அவரது இந்தப் பணியில் முழு நேரமாக உதவி செய்வது இயக்குநர் ஞானவேலாம்.

சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஞானவேலை அழைத்து, தனது ‘வேட்டையன்’ படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார் ரஜினி.

அப்போது பழகியதில் ஞானவேலிடம் உள்ள மேலும் பல திறமைகள், ஆர்வங்களை அறிந்துகொண்டாராம் ரஜினி.

மிகச் சிறந்த வாசிப்பாளர் என்ற வகையில் ஞானவேல், தாம் ரசித்துப் படித்த பல புத்தகங்களை ரஜினியுடன் பகிர்ந்துகொண்டார்.

அதன் பிறகே, சுயசரிதைப் புத்தகத்தை எழுதும் பணியில் ஞானவேல் உதவியைப் பெறுவது என ரஜினி முடிவெடுத்தாராம்.

அடுத்த சில மாதங்களில் புத்தகப் பணி முடிவடையும் என்றும் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மறைந்த தலைவர் நல்லகண்ணு கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விருப்பம் தெரிவித்துள்ளனர்

“நல்லகண்ணு அவர்களின் வெள்ளந்தியான சிரிப்பு, ரஜினியின் இயல்பான சிரிப்புடன் அழகாக ஒத்துப்போகும்.

“மேலும் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற ரஜினியின் ஆசை நிறைவேறாமல் போனாலும் நல்லகண்ணு போன்று ஓர் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக நடிப்பதன் மூலம் அவரது மனம் நிறைவடையும்,” என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, ‘ஏஐ’ மூலம் ரஜினியை நல்லகண்ணுவாகச் சித்திரிக்கும் படம் ஒன்றும் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்