தமிழ்த் திரையுலகம் இன்னொரு வீடாகிவிட்டது: நிமிஷா சஜயன்

1 mins read
4cbe860f-cc08-4d28-b362-2c669b36a7ed
நிமிஷா சஜயன். - படம்: அவுட்லுக் இந்தியா

தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதால் தமிழ்ப் படங்களில் நடிக்க முன்னுரிமை அளித்து வருகிறார் மலையாள நடிகை நிமிஷா சஜயன்.

அதேசமயம் யார் கதாநாயகன், தயாரிப்பாளர், சக கலைஞர்கள் என்பதெல்லாம் இவருக்கு ஒரு பொருட்டே அல்ல.

கதை என்ன? யார் இயக்குநர்? என்பதில் மட்டுமே முதலில் கவனம் செலுத்துகிறார். அந்த வகையில் கருணாஸ் கதை நாயகனாக நடிக்கும் ‘என்ன விலை’ படத்தில் நடித்து வருகிறார் நிமிஷா.

இதில் அவர் கருணாஸ் ஜோடியாக அல்லாமல், வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்து அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் புதுப் படத்திலும் இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இது காதலும் திகிலும் கலந்த கதையை வைத்து உருவாகும் படம். அசோக் செல்வன் நடித்த படங்களிலேயே அதிக பொருள் செல்வில் உருவாகும் படமாக இது இருக்குமாம்.

“என்னுடையை படத் தேர்வுக்கு தமிழ் ரசிகர்கள்தான் காரணம். தரமான படங்களை, திறமைசாலிகளை வரவேற்க அவர்கள் கொஞ்சம்கூட தயங்குவதில்லை. மலையாளப் படங்களில் எந்த அளவுக்கு கவனம் செலுத்தி இயல்பாக நடிக்க முயற்சி செய்தேனோ அதேபோல் தமிழிலும் நடிக்கிறேன்.

“தமிழ்த் திரையுலகம் என்னுடைய இன்னொரு வீடாகிவிட்டது,” என்கிறார் நிமிஷா சஜயன்.

குறிப்புச் சொற்கள்