விக்ரம் மகன் துருவ் அடுத்து தெலுங்கு இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இது ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படமாம்.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ படத்தில் நடித்து வருகிறார் துருவ்.
இந்நிலையில், ‘ஆர் எக்ஸ் அண்டர்’, ‘மகாசமுத்ரம்’ உள்ளிட்ட தெலுங்குப் படங்களை இயக்கி பெயர் பெற்ற அஜய் பூபதி, அண்மையில் துருவ் விக்ரமை நேரில் சந்தித்து கூறிய கதை துருவுக்கு மிகவும் பிடித்துப்போனதாம்.
அடுத்த கட்டமாக விக்ரமும் கதையைக் கேட்டு ஒகே சொன்னதால் உடனடியாக கால்ஷீட் ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது.
மாரி செல்வராஜ் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை அளித்து வரும் நிலையில், ‘பைசன்’ திரைப்படமும் அந்த வெற்றி வரிசையில் இணையும் என உறுதியாக நம்புகிறாராம் துருவ்.
தன் மகன் துருவ் இன்னும் பெரிய வெற்றிப் படத்தில் நடிக்கவில்லை என்பதில் அவரது தந்தை விக்ரம் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம்.
எனவே இந்தப் படத்தை எப்பாடுபட்டாவது வசூல் ரீதியில் வெற்றிப் படைப்பாக உருவாக்குமாறு இயக்குநரை அவர் கேட்டுக் கொண்டுள்ளாராம்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு, “நல்லதே நடக்கும் என நம்புவோம்,” என்று மாரி செல்வராஜ் கூறியதாகத் தகவல்.