பிரபல நடன இயக்குநர் ஜானி மீதான பாலியல் புகார் குறித்த விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், தனது கணவர் மீது எந்தத் தவறும் இல்லை என்று ஜானியின் மனைவி சுமலதா தெரிவித்துள்ளார்.
“திரையுலகில் சம்பாதித்தால் சொகுசாக வாழ முடியும் என்ற ஆசையில் என் கணவர் மீது புகார் அளித்துள்ளார் அந்தப் பெண்.
“பணம் சம்பாதிக்கும் ஆசையில் என் கணவரிடம் பணிக்குச் சேர்ந்தார். நடன கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராகச் சேர பணமின்றி சிரமப்பட்டவருக்கு ஜானிதான் உதவினார்.
“அந்தப் பெண் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்ட நிலையில், ஜானிதான் அவருக்கு பல படங்களில் பணியாற்ற வாய்ப்பு அளித்தார்,” என்று சுமலதா கூறியுள்ளார்.
தன் கணவரும் புகார் அளித்த பெண்ணும் நெருக்கமாக இருந்ததை யாரேனும் பார்த்துள்ளனரா, பாலியல் தொல்லை குறித்து அவர் ஏன் முன்பே கூறவில்லை என ஜானியின் மனைவி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முன்னதாக, 21 வயது இளம் பெண் அளித்த புகாரின் பேரில், கோவாவில் தலைமறைவாக இருந்த ஜானி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.