தன் பெயரைக் கெடுக்க சிலர் முயற்சி செய்வதாக இளம் நாயகி கயாது லோஹர் புகார் எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தன் பெயரில் உள்ள ‘எக்ஸ்’ தளக் கணக்கின் மூலம் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் நடிகர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, கயாது லோஹர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாக ஒரு தகவல் வெளியானது.
மக்களும் ரசிகர்களும் உங்கள் நட்சத்திரத் தகுதிக்கான பொம்மைகள் அல்ல என்றும் உங்கள் பேராசைக்காக இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகிறதோ என்றும் அந்தத் தகவல் தெரிவித்தது.
இந்நிலையில், அக்குறிப்பிட்ட எக்ஸ் தளக் கணக்கு போலியானது என்றும் அதன் மூலம் வெளியான தகவல்கள் தமது கருத்து அல்ல என்றும் கயாது விளக்கம் அளித்துள்ளார்.
“தயவு செய்து அந்தத் தவறான தகவலை நம்பவோ, பரப்பவோ வேண்டாம். துயரத்தில் உள்ள குடும்பங்களுக்காக என் பிரார்த்தனைகள் தொடரும்,” என்று கயாது மேலும் தெரிவித்துள்ளார்.