தமிழில் மண், இனம், மொழி சமூகம் சார்ந்த நல்ல படைப்புகளும் அவ்வப்போது வெளிவருகின்றன.
அந்த வகையில், ‘ரமணா கிரியேஷன்ஸ்’ நிறுவனம், காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், மகாத்மா காந்தியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ‘வெல்கம் பேக் காந்தி’ என்ற பெயரிலும் படங்களைத் தயாரித்துள்ளது.
அந்த வகையில், அடுத்த நல்ல முயற்சியாக திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ‘திருக்குறள்’ என்ற படத்தைத் தயாரித்துள்ளனர்.
முந்தைய இரு படங்களை இயக்கிய ஏ.ஜே.பாலகிருஷ்ணன்தான் திருவள்ளுவரின் வாழ்க்கையையும் திரையில் காட்சிப்படுத்தி உள்ளார்.
இந்தப் படம் குறித்த விமர்சனங்கள் ஊக்கமளித்தாலும், திரையரங்கில் எதிர்பார்த்த கூட்டம் இல்லையாம்.
“எனவே, நல்ல படைப்பை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் யூடியூப் தளத்தில் இலவசமாக வெளியிட முடிவு செய்துள்ளோம்.
“இந்தப் படம் உலகம் முழுவதும் போய்ச் சேரும், காலம் கடந்து நிற்கும் என நம்பிக்கை உள்ளது,” என்கிறார் பாலகிருஷ்ணன்.