நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த், தனியாக மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். ‘மக்கள் மேடை’ என்கிற பெயரிலான இந்த இயக்கம் குறித்துச் சனிக்கிழமை (ஜூன் 6) பேசியிருக்கிறார் லதா ரஜினிகாந்த்.
“எங்களுடைய இயக்கம் மூலமாக இந்த மாநிலத்திற்குப் பணி செய்ய நினைக்கும் அனைவரும் எங்களுடன் இணையலாம்,” என்று லதா ரஜினிகாந்த் புதிய காணொளி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
“மாநிலத்திற்குப் பல நன்மைகள் செய்திட அனைவரும் முன்வர வேண்டும். ஒன்றாகச் சேர்ந்து ஆக்கபூர்வமான விஷயங்களைச் செய்வோம். உள்ளூரில் புதிய தலைவர்களை உருவாக்க வேண்டியது அவசியம். இந்த மாநிலத்திற்குத் தங்களின் வலிமை, புதிய சிந்தனைகள், பங்களிப்புகளைத் தருவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
“அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், இளைஞர்கள் எனச் சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் அனைத்துத் தரப்பு மக்களும் எங்களோடு கைகோக்கலாம். நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து நல்ல பல காரியங்களைச் செய்வோம்,” என லதா ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இவரின் அறிவிப்பு, தற்போது மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

