சசிகுமாரின் ஜோடியாக மூன்று நாயகிகள்

சசிகுமாரின் ஜோடியாக மூன்று நாயகிகள்

படம்: தினமணி

23 Oct 2026 - 5:47 pm

1 mins read

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பூஜை சென்னையில் தொடங்கிய நிலையில், தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு முறையாக நடைபெற உள்ளது.

டிரைடென்ட் ஆர்ட்ஸ், 6 டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். கன்னட இயக்குநர் ஹரி சந்தோஷ் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் சுவாசிகா, நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர் ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

நரேன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஹரிஷங்கர், ஹரீஷ் பேரடி, தேனப்பன், வையாபுரி, ஆனந்த் நாக், வசந்தி ஆகியோரும் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் குறித்து இயக்குநர் கூறும்போது, “இது ஒரு புதுமையான குடும்பத்தில் நிலவும் மர்மக் கதை. தமிழில் எனது முதல் படத்திற்காகத் தயாரிப்பாளர்களுடனும் சசிகுமாருடனும் இணைவதில் மகிழ்ச்சி,” என்றார்.

இந்நிலையில், நடிகர் சசிகுமார் ‘ஜெயிலர் 2’ படம் தொடர்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சூப்பர் ஸ்டார் எப்போதும் சூப்பர் ஸ்டார்தான். இயக்குநர் நெல்சன், ‘ஜெயிலர் 2’ படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்,” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த நமோ நாராயணாவுக்குப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
நடிகைநடிகர்திரைப்படம்இயக்குநர்