விவசாயப் பின்னணியில் உருவாகும் படம் ‘டிராக்டர்’

1 mins read
3e3a6b0f-337c-4fff-9792-2b8dc375029a
‘டிராக்டர்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

புதுமுகங்களை வைத்து உருவாகிறது ‘டிராக்டர்’ திரைப்படம்.

ரமேஷ் யந்த்ரா இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘குடியம் குகைகள்’, ‘இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை’ ஆகிய ஆவணப்படங்களை இயக்கியவர். இவர் இயக்கும் முழுநீளத் திரைப்படம் இதுதான்.

படத்தின் நாயகன் பிரபாகரன் ஜெயராமன், நாயகி ஸ்வீதா பிரதாப் ஆகிய இருவருமே புதுமுகங்கள்தான்.

ஏழை விவசாயிகளைத் தனியார் நிறுவனங்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி உள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர்.

“நமது விவசாயிகளின் படிப்பறிவு இல்லாத நிலையைப் பயன்படுத்தியும் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற நினைத்து தனியார் நிறுவனங்கள் செய்துவரும் ஏமாற்று வேலைகளை மையமாக வைத்தும் இப்படத்தை உருவாக்கி உள்ளோம்.

“இன்றைய ‘கார்பரேட்’ நிறுவனங்கள் பாரம்பரியமான நமது விவசாயத்தை எப்படி அழிக்கின்றன என்பதை இப்படம் மக்களுக்கு உரக்கச் சொல்லும்.

“இந்தப் படம் சென்னை அனைத்துலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது,” என்கிறார் இயக்குநர் ரமேஷ் யந்த்ரா.

குறிப்புச் சொற்கள்