பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.
அவரது மறைவு சின்னத்திரை வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
47 வயதான நேத்ரன், ‘மருதாணி’ என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். கடந்த 25 ஆண்டுகளாக ஏராளமான தொடர்களில் நடித்து பிரபலமான இவர், தற்போது ‘பாக்கியலட்சுமி’ தொடரிலும் நடித்து வந்தார்.
கடந்த ஆறு மாதங்களாக தனது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தீவிர சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறும் நேத்ரனின் மகள் காணொளி மூலம் அண்மையில் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேத்ரன் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.