ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா நடித்த ’கஜினி’ திரைப்படம் கடந்த 2005ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் 2008ஆம் ஆண்டு இந்தியில் மறுபதிப்பு செய்யப்பட்டது. அமீன் கான், அசின் உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி கண்டது.
இந்நிலையில், ‘கஜினி’ படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் கஜினியாக நடித்த சூர்யாவும் இந்தியில் கஜினியாக நடித்த அமீர் கானும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இப்படத்தில் இரண்டு கஜினிகளா? என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

