‘வித் லவ்’ படத்தை விளம்பரப்படுத்த வித்தியாசமான முன்னெடுப்பு

‘வித் லவ்’ படத்தை விளம்பரப்படுத்த வித்தியாசமான முன்னெடுப்பு

படம்: சமயம் தமிழ்

01 Feb 2026 - 1:43 pm

1 mins read

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் நாயகனாக நடிக்கும் ‘வித் லவ்’ படத்தை அவரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்குகிறார்.

இப்படத்துக்காக பெரிய அளவில் விளம்பரம் ஏதும் செலவு செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக வித்தியாசமான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளனர்.

யூடியூப் தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் (Influencers) சிலர், திடீரென சாலையோரத்தில் அமர்ந்து யாசகம் கேட்பவர்கள், சில்லரை வியாபாரிகள் ஆகியோரை அணுகி எதிர்பாராதவிதமாக ஒரு தொகையைக் கொடுத்து ஆச்சரியப்பட வைப்பார்கள்.

அதுபோன்ற காணொளிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுபோன்ற யூடியூப் பிரபலங்கள் நான்கைந்து பேரை அணுகியுள்ள ‘வித் லவ்’ படக்குழுவினர் கணிசமான தொகையைக் கொடுத்துள்ளனர்.

அந்தத் தொகையை சிரமப்படுபவர்களுக்கு பகிர்ந்துகொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனராம். இதனால் உதவி செய்தது போலாயிற்று, விளம்பரமும் செய்ததுபோல் ஆயிற்று.

‘வித் லவ்’ படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார், அப்படக் குழுவின் முன்னெடுப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைப்படம்இயக்குநர்விளம்பரம்நிதியுதவி