‘கோட்’ படத்தையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போகிறார் வெங்கட் பிரபு. அண்மைய பேட்டி ஒன்றில் சிவாவை அவர் பாராட்டித் தள்ளியுள்ளார்.
“சிவா மிகுந்த திறமைசாலி. அவரால் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தைப்போல் கலகலப்பாகப் பேசி சிரிக்க வைக்க முடியும். ‘மாவீரன்’ படம்போல் மாறுபட்ட கதைக்களத்திலும் மிளிர முடியும்.
“குடும்பத்துடன் திரையரங்குக்குப் படம் பார்க்க வரும் ரசிகர்கள் எவற்றை எல்லாம் எதிர்பார்க்கிறார்களோ அவை அனைத்தும் என் படத்தில் இருக்கும்.
“அதே சமயம் ’மாவீரன்’ போன்று மாறுபட்ட ஒரு கதைக்களத்தை எதிர்பார்க்கலாம்,” என்கிறார் வெங்கட் பிரபு.