நான்தான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்று இளையர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் தம்பதிக்கு ஆராத்யா பச்சன் என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், சங்கீத் குமார் என்ற இளையர் திடீரென்று, “நான்தான் ஐஸ்வர்யா ராயின் மகன். அவருக்குத் திருமணம் ஆவதற்கு முன்பே 15 வயதாக இருந்தபோது ஐஸ்வர்யா ராய் பெற்றெடுத்தார்,” என்று கூறியுள்ளார்.
“லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் IVF முறையில் பிறந்தேன். அதன்பின்னர் ஐஸ்வர்யா ராயின் பெற்றோர் என்னை விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்று வளர்த்தனர். எனது பிறப்புச் சான்றிதழ் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை,” என்று அந்தக் காணொளியில் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட காணொளி என அதன் உண்மைத்தன்மை குறித்து தெரியவந்துள்ளது.
காணொளியில் பேசிய இளையர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்பது உறுதியாகியிருக்கிறது.