வெற்றி மாறன் இயக்கத்தில் தாம் கதாநாயகனாக நடித்த ‘விடுதலை’ படம், பலரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் இரண்டு பாகங்களிலும் குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது தனது திரை வாழ்க்கையில் சிறப்பான பாத்திரமாக அமைந்திருக்கும் என்று தன் சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இரண்டு பாகங்களாக வெளியான ‘விடுதலை’ படம் என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய படைப்புகள். இந்தப் பயணத்தை சாத்தியமாக்கிய, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட எனது தொலைநோக்கு இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருக்கும் சக நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் பெரிய நன்றி.
“அனைத்து உதவி, இணை இயக்குநர்களுக்கும் சிறப்பு பாராட்டு. உங்களுடைய கடின உழைப்பு, வழிகாட்டுதல், ஆதரவின்றி இவ்வளவு சிறப்பு வாய்ந்த படத்தில் பங்கேற்று இந்த மைல்கல்லை நான் எட்டியிருக்க முடியாது.
“அனைத்து ஊடகங்கள், சினிமா ஆர்வலர்களுக்கும் என்றென்றும் நன்றி. நீங்கள்தான் எனக்கு மிகப்பெரிய பலம்,” என சூரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.