நடிகர் விஜய் மிகப் பெருந்தன்மையாகவும் அன்பாகவும் செயல்படக்கூடியவர் என்று பாராட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்.
‘கோட்’ படத்தின் இறுதிக்காட்சி குறித்து அண்மையில் அளித்த பேட்டியில் அவர் சுவாரசியமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
“படப்பிடிப்புக்கு முந்தைய நாள்தான் இந்தக் காட்சி தொடர்பான வசனங்களைக் கொடுத்தனர். இயக்குநர் வெங்கட் பிரபு காட்சியை வேறு விதமாக படமாக்கத் திட்டமிட்டிருந்தாராம்.
“விஜய் என்னை நோக்கி ஒரு துப்பாக்கியை தூக்கிப்போட்டு, ‘இதை வெறுமனே பார்த்துக்கொள்ளுங்கள், ஆனால் சுடக்கூடாது’ என்று வசனம் பேசுவதாக இருந்தது.
“ஆனால் படப்பிடிப்பின்போது அதை சற்றே மாற்றி, ‘துப்பாக்கி பிடிங்க சிவா’ என்று பேசினார் விஜய். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதை அவர் எனக்கு தந்த அன்பாக மட்டுமே பார்க்கிறேன்,” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.