நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அண்மையில் ‘மத கஜ ராஜா’ பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஷாலின் தோற்றம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் பரவியது.
இந்நிலையில், விஷால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் வதந்தி என்று அவரது மேலாளர் கூறியுள்ளார்.

