‘கேஜிஎஃப்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் கன்னட நடிகர் யஷ். அப்படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றன. தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் ‘ராமாயணா’ படத்தில் ராவணன் வேடத்தில் யஷ் நடித்து வருகிறார்.
இது, வில்லன் கதாபாத்திரம் என்றாலும், கதாநாயகனாக நடிப்பதற்கு வாங்கும் அதே சம்பளத்தை யஷ் வாங்குகிறார். நாயகனாக நடிக்க யஷ் 200 கோடி ரூபாய் பெற்றுவருகிறார்.
வில்லன் வேடம் என்பதால், சம்பளத்தைப் பாதியாக குறைத்து கொடுப்பதற்குப் படக்குழு முடிவுசெய்திருந்தது. ஆனால், கதாநாயகனாக தான் பெறும் அதே சம்பளத்தைக் கொடுத்தால் மட்டுமே இப்படத்தில் நடிப்பேன் என யஷ் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
அவரின் முடிவை ஏற்றுக்கொண்ட படக்குழு அவருக்கு கதாநாயகனுக்கான சம்பளத்தை அளிக்க ஒப்புக்கொண்டது. அதனைத்தொடர்ந்து அப்படத்தில் யஷ் நடிக்கிறார்.