ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3.45 மணிக்கு, சிங்கப்பூர்த் தேசிய நூலக வாரியத்தின் ஐந்தாம் தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் கதைக்களம் நடைபெறவிருக்கிறது.
சிங்கை எழுத்தாளர் மா. இளங்கண்ணனின் சிறுகதைகளைப்பற்றி ரிவர்சைட் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றனர்.
கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படவிருக்கின்றன.
“வாசிப்போம் சிங்கப்பூர்” நிகழ்வுக்காக 15 நிமிட நூல் வாசிப்பு நிகழ்வும் நடைபெறவிருக்கிறது.
எழுத்தாளர் கழகத்தின் இளையர் பிரிவு உறுப்பினர் செல்வி மோகன் ஹரிவர்த்தினி நெறிப்படுத்தும் இந்நிகழ்ச்சிக்கு அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
ஆகஸ்ட் மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட நூலறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும்.
சிறந்த 4 நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.
மூன்று பிரிவுகளாக நடைபெறும் ஆகஸ்ட் மாதச் சிறுகதைப் போட்டிக்கு எழுதுவதற்கான தொடக்க வரிகள்:
தொடர்புடைய செய்திகள்
உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு: 200 முதல் 300 சொற்களுக்குள் எழுத வேண்டும். “எல்லாம் எளிதில் கிடைச்சிடுறதால பொருளோட அருமை புரியறதில்ல; சொற்களின் அனல் தாங்கவில்லை”.
இளையர் பிரிவு: 300 முதல் 400 சொற்களுக்குள் எழுத வேண்டும். “ஒரு கதவை மூடிவிட்டு வருவதற்குள் மறு கதவு திறந்துகொண்டு என்னைப் பார்த்துச் சிரித்தது.”
பொதுப்பிரிவு: 400 முதல் 500 சொற்களுக்குள் எழுத வேண்டும். “அறுபதாண்டுகளாக நினைவில் பூட்டிக்கிடந்த இரகசியத்தை, ஒவ்வொரு சொல்லாகச் சொல்லத் தொடங்கினார்.”
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு ttps://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற மின்னியல் படிவத்தின் வழியாக 25/7/2025 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்கவும்.
மேல்விவரங்களுக்கு: https://www.singaporetamilwriters.com/16
பிரதீபா வீரபாண்டியன் - 81420220/ பிரேமா மகாலிங்கம் - 91696996