நீண்டகால அதிகாரப் பத்திரத்தைப் பதிவுசெய்த 287 இந்தியர்கள்

நீண்டகால அதிகாரப் பத்திரத்தைப் பதிவுசெய்த 287 இந்தியர்கள்

2 mins read
fc121789-15ee-4d97-a143-b3df2c0641a6
இந்தியச் சமூகத்தினரிடையே நீண்டகால அதிகாரப் பத்திரப் பதிவு விகிதம் குறைவாக இருக்கும் நிலையில், இந்து அறக்கட்டளை வாரியமும் பொதுக் காப்பாளர் அலுவலகமும் இணைந்து சிறப்புப் பதிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன. - படம்: இந்து அறக்கட்டளை வாரியம்

சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தினரிடையே நீண்டகால அதிகாரப் பத்திரம் (LPA) குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் சிறப்புப் பதிவு நிகழ்ச்சி ஒன்று சனிக்கிழமை (மார்ச் 7) நடைபெற்றது.

இந்தியச் சமூகத்தினரிடையே அந்தப் பத்திரப் பதிவு விகிதம் குறைவாக இருப்பதை மாற்றும் நோக்கில் இந்து அறக்கட்டளை வாரியமும் பொதுக் காப்பாளர் அலுவலகமும் இணைந்து அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.

சிராங்கூன் சாலையில் உள்ள பிஜிபி மண்டபத்தில் காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை அந்நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்பதிவின்றி, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நடைபெற்ற அந்நிகழ்வில் மொத்தம் 287 நீண்டகால அதிகாரப் பத்திரங்கள் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டன என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். கடந்த 2025ல் 108 பத்திரங்கள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், இவ்வாண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியச் சமூகத்தினரிடையே நீண்டகால அதிகாரப் பத்திரப் பதிவு விகிதம் குறைவாக இருக்கும் நிலையில், இந்து அறக்கட்டளை வாரியமும் பொதுக் காப்பாளர் அலுவலகமும் இணைந்து சிறப்புப் பதிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.
இந்தியச் சமூகத்தினரிடையே நீண்டகால அதிகாரப் பத்திரப் பதிவு விகிதம் குறைவாக இருக்கும் நிலையில், இந்து அறக்கட்டளை வாரியமும் பொதுக் காப்பாளர் அலுவலகமும் இணைந்து சிறப்புப் பதிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன. - படம்: இந்து அறக்கட்டளை வாரியம்

எதிர்பாராத விதமாக ஒருவர் தமது சிந்தனைத்திறனை இழக்கும்போது, அவரது மருத்துவ, நிதி சார்ந்த முடிவுகளை எடுக்க 21 வயதிற்கு மேற்பட்ட, அவரது நலனைக் கருத்தில்கொண்டு செயல்படும் நம்பிக்கையான ஒருவரை முன்கூட்டி நியமிப்பதே இந்த நீண்டகால அதிகாரப் பத்திரம் என இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவைக்குழுத் தலைவரும் வழக்கறிஞருமான திருவாட்டி சுசிலா கணேசன் விளக்கினார்.

“உயில் என்பது மரணத்திற்குப்பின் செயல்பாட்டிற்கு வரும். ஆனால், நாம் உயிருடன் இருக்கும்போதே, நாமாக முடிவெடுக்க முடியாத நிலையில் இந்தப் பத்திரம் கைகொடுக்கும்,” என்று அவர் விளக்கினார்.

2022ஆம் ஆண்டு சவுத் பிரிட்ஜ் சாலை ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தொடங்கப்பட்ட இந்தச் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியை வாரியம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

இந்தியச் சமூகத்தினரிடையே நீண்டகால அதிகாரப் பத்திரப் பதிவு விகிதம் குறைவாக இருக்கும் நிலையில், இந்து அறக்கட்டளை வாரியமும் பொதுக் காப்பாளர் அலுவலகமும் இணைந்து சிறப்புப் பதிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.
இந்தியச் சமூகத்தினரிடையே நீண்டகால அதிகாரப் பத்திரப் பதிவு விகிதம் குறைவாக இருக்கும் நிலையில், இந்து அறக்கட்டளை வாரியமும் பொதுக் காப்பாளர் அலுவலகமும் இணைந்து சிறப்புப் பதிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன. - படம்: இந்து அறக்கட்டளை வாரியம்

சிங்கப்பூரர்களுக்கு நீண்டகால அதிகாரப் பத்திரத்தைப் பதிவுசெய்வதற்கான கட்டணத்தை அரசாங்கம் நிரந்தரமாக இலவசமாக்கி இருப்பதைத் திருவாட்டி சுசிலா சுட்டினார்.

இருப்பினும், வழக்கறிஞர்கள் அல்லது மருத்துவர்கள்மூலம் வேறு இடங்களில் இதனைப் பதிவுசெய்ய $150 முதல் $300 வரை கட்டணம் செலுத்த நேரிடும் என்பதால், இத்தகைய நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் இலவச சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் ‘இன்ஸ்டகிராம்’ பக்கம் வாயிலாகத் தகவல் அறிந்து, தம் மனைவி, பிள்ளைகளுடன் கலந்துகொண்டு பத்திரத்தைப் பதிவுசெய்துகொண்டார் திரு வி. ராஜகோபால், 50.

கூட்டமாக இருந்தாலும் தொண்டர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் சிறப்பான உதவியால் அரைமணி நேரத்திற்குள் பதிவை முடித்துவிட்டதாக அவர் சொன்னார்.

இதற்குமுன் தம் தந்தையார் எதிர்கொண்ட சிரமங்களைப் பார்த்ததை நினைவுகூர்ந்த திரு ராஜகோபால், தமக்கு ஏதாவது நேர்ந்தால் முடிவுகளை எடுக்க ஒருவரை முன்கூட்டியே நியமித்திருப்பது மனஅமைதி அளிப்பதாகக் கூறினார். தாமும் தம் மனைவியும் ஒருவருக்கொருவர் பொறுப்பாளர்களாக நியமித்துக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்