சிங்கப்பூர்: பயணம், கூட்டங்கள், பணி இலக்குகள் என ஒரே மாதிரியான வாராந்தரச் சுழற்சியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு, கலை நிகழ்ச்சிகள் மனத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் சிறந்த வழியாகும். மதிய உணவு நேரம் அல்லது வார இறுதிகளின் காலை ஓய்வுநேரத்தில் திரைகளிலிருந்து விடுபட்டு மனச்சுமையைக் குறைக்க Catch.sg தளம் பரிந்துரைக்கும் சில கலை நிகழ்ச்சிகள்:
1. மதிய உணவு நேரத்தில் புத்துணர்ச்சி தரும் புகைப்படக் கண்காட்சி
வர்த்தக வட்டாரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த இலவசப் புகைப்படக் கண்காட்சி, பொது இடங்களில் இயல்பான தருணங்களைப் படம்பிடிக்கும் முன்னோடிப் படக் கலைஞர் லோக் ஹாங் செங், கலைஞர் வெய் லெங் டே ஆகியோரின் படைப்புகளைக் காட்சிப்படுத்துகிறது. 1960 மற்றும் 1970களில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புகள் உருவானபோது சிங்கப்பூரின் நகர்ப்புற மாற்றத்தை லோக்கின் ஆவணப் புகைப்படங்கள் காட்டுகின்றன. டேயின் சமகாலக் கலைப் படைப்புகள் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கின்றன.
நிகழ்ச்சி: What Remains: A Dialogue Across Time (இயோ வொர்க்ஷாப்) நாள் / நேரம்: டிசம்பர் 4 வரை வார நாள்களில் பிற்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்: VITRINE @ OUE டௌன்டவுன் கேலரி, #01-36, 6A ஷென்டன் வே கட்டணம்: இலவசம்
2. உடல் இறுக்கத்தைத் தளர்த்தும் ஆரம்பநிலை நடனப் பயிற்சி
அலுவலகத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் உடல் இறுக்கத்தைக் குறைக்க, சிங்கப்பூர்ச் சீனக் கலாசார நிலையத்தில் ரெட் மூன் நடனக் குழுவினர் நடத்தும் ஒரு மணி நேர நடனப் பயிற்சியில் இணையலாம். ஆரம்பநிலையாளர்களுக்கு ஏற்ற சீன நடன நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கும் இப்பயிற்சி, உடலின் நெகிழ்வுத்தன்மையையும் சமநிலையையும் மேம்படுத்த உதவுகிறது.
நிகழ்ச்சி: Dance Connections (சிங்கப்பூச்ர் சீனக் கலாசார நிலையம்) நாள் / நேரம்: 2027 டிசம்பர் 30 வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் (பொது விடுமுறை நாள்கள் தவிர்த்து), இரவு 7 மணி இடம்: சிங்கப்பூர்ச் சீனக் கலாசார நிலையம், 1 ஸ்ட்ரெய்ட்ஸ் புலவார்ட் கட்டணம்: இலவசம் (முன்பதிவு அவசியம்)
3. மனத்தை அமைதிப்படுத்தும் இசை நிகழ்ச்சி
தொலைபேசி அறிவிப்புகளிலிருந்தும், இடைவிடாத இரைச்சல்களிலிருந்தும் விடுபட்டு, ஆழ்ந்த கவனத்தை வளர்க்க டிங் யி இசை நிறுவனத்தின் வருடாந்தர ‘ECOncert’ இசை நிகழ்ச்சி உதவுகிறது. படைப்பாக்க இயக்குநர் டெட்ரிக் வோங் டி லி, மேடை இயக்குநர் ஆங் சியாவோ டிங் ஆகியோரின் வழிகாட்டுதலில், மென்மையான சீன இசையையும் காட்சிக் கலையையும் இணைத்து இயற்கையுடனான நமது உறவை இந்நிகழ்ச்சி ஆராய்கிறது.
நிகழ்வு: ECOncert 2026 (டிங் யி இசை நிறுவனம்) நாள் / நேரம்: டிசம்பர் 5, பிற்பகல் 3 மணி, இரவு 7.30 மணி இடம்: ஃப்ளெக்சிபிள் பெர்ஃபார்மன்ஸ் ஸ்பேஸ், லசால் கலைக் கல்லூரி, 1 மெக்னல்லி தெரு கட்டணம்: $20 முதல் (எஸ்ஜி கலாசார பாஸ் பயன்படுத்தலாம்)
மேல்விவரங்களுக்கு Catch.sg இணையத்தளத்தைப் பார்க்கவும். தகுதியுள்ள நிகழ்ச்சிகளுக்கு $100 மதிப்புள்ள ‘எஸ்ஜி கலாசார பாஸ்’ பயன்படுத்திக்கொள்ளலாம்.
