‘ஓய்வறியாது மீன்கள்’ நூல் வெளியீடு

‘ஓய்வறியாது மீன்கள்’ நூல் வெளியீடு

1 mins read
75833bdd-4d53-4fd4-b7f6-9fe41b1edb02
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் அறக்கொடை நூல்வெளியீடு. - படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
Google News Preferred Icon

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் அறக்கொடை நூல்வெளியீடாகத் திரு யூசுப் ராவுத்தர் ரஜித்தின் (அமீதாம்மாள்) ‘ஓய்வறியாது மீன்கள்’ எனும் கவிதைத் தொகுப்பு வெளியீடு காண்கிறது. 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும்.

தேசிய நூலகத்தின் 16ஆம் தளத்தில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பேராசிரியர் அ. வீரமணி கலந்துகொள்கிறார்.

நூல் வெளியீட்டில் கிடைக்கும் நிதி, சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்துக்கு வழங்கப்படும். அவர்களின் தமிழ் நிகழ்ச்சிகளான அரிமா, உச்சம் போன்றவை இளையரைக் கவரும் நோக்கத்துடன் நடத்தப்படுகின்றன. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டுக் குழு கேட்டுக் கொள்கிறது.

மேல்விவரம் அறிய விரும்புவோர் திரு ரஜித்தைத் தொடர்புகொள்ளலாம். கைப்பேசி எண்: 9001 6400.

குறிப்புச் சொற்கள்