நீ சூன் லிங்க் குழுத்தொகுதியில் இந்தியச் சமூகத்தினருடன் சீன, மலாய் உட்பட அனைத்து இன மக்களும் இணைந்து தீபத் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர். ஏறத்தாழ 400 குடியிருப்பாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்றது.
நீ சூன் லிங்க் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் நடந்த இவ்விழாவில், நீ சூன் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர் டெரிக் கோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
2016 முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி, பல்வேறு அங்கங்களுடன் களைகட்டியது. போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்குப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
நீ சூன் லிங்க் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் பாலசுந்தரம் ராமலிங்கம், துணைத் தலைவர் ஜீவானந்தம் சாந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்த இவ்விழா, அதிர்ஷ்டக் குலுக்கு பரிசுகள், அறுசுவை உணவுடன் குடியிருப்பாளர்களுக்குப் பண்டிகைக்கால உற்சாகத்தை அளித்தது.

