தமிழ் இலக்கியத்தைப் போற்றிய நிகழ்ச்சி

தமிழ் இலக்கியத்தைப் போற்றிய நிகழ்ச்சி

1 of 3
படம்: வாழ்வியல் இலக்கியப் பொழில்
படம்: வாழ்வியல் இலக்கியப் பொழில்
படம்: வாழ்வியல் இலக்கியப் பொழில்

17 Oct 2026 - 6:00 am

2 mins read

‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பின் 108வது மாதாந்தர நிகழ்ச்சி அக்டோபர் 11ஆம் தேதி பொங்கோல் சமூக மன்றத்தில் நடைபெற்றது.

அமைப்பின் உறுப்பினர் மோகனபிரியா ராமலிங்கம், இலக்கியப் பொழிலில் இளைப்பாற நேரிலும் இணையவழியும் பங்கேற்றோரை வரவேற்றார்.

சிறார் அங்கத்தில் செல்வி கண்மணி தமிழ்ப் பாடலைப் பாடினார்; விக்ரம் கிருஷ் ‘நீதி வெண்பா’ நூலின் பாடல் வரிகளை எடுத்துரைத்தார்; விக்ரம் தியா நன்னெறிப் பாடலைப் பாடினார்; வர்ணிகா வினேஷ் மனோ, அன்னாசிப் பழத்தின் நன்மைகளைக் கூறினார். தமிழோவியா அருள்பிரகாஷ், பாரதியாரின் புதிய ஆத்திசூடியை எடுத்துரைத்தார்; மேகவர்தினி அருள்பிரகாஷ், சிங்கப்பூரிலுள்ள விலங்குநல ஆர்வலர்களைப் பற்றிப் பேசினார். 

அமைப்பின் தலைவர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி அறிமுகவுரையில் ‘முகநிலை’ எனும் தலைப்பில் பல்வேறு இலக்கியக் குறிப்புகளுடன் பேசினார். திருவாட்டி உஷா கிருஷ்ணமூர்த்தி ‘எண் 180ன் சிறப்புகள்’ பற்றிப் பேசினார்.

‘அகிம்சை’ குறித்து திருவாட்டி ஹேமா பிரபாகரன் சிற்றுரையாற்றினார். திருச்சியிலிருந்து வந்திருந்த முனைவர் கரு.கலையரசி இலக்கிய நூல்களில் வரும் சங்ககால மகளிர் பற்றி பல அரிய செய்திகளை மேற்கோள் காட்டினார். 

திருவாட்டி சவிதா, திருவாட்டி மோகனபிரியா, திருவாட்டி கஸ்தூரி, திருவாட்டி தீபிகா, திருவாட்டி ஆர்த்தி ஆகியோர் ‘திணை இலக்கியத் திரட்டு’ வாயிலாகப் புறநானூற்றில் வரும் ஐந்து பாடல்கள் விளக்கும் கதைகளை விளக்கினர்.

நிகழ்ச்சி ஃபேஸ்புக்கிலும் பொழில் பண்பலையிலும் நேரலையாக ஒளி, ஒலிபரப்பப்பட்டது.

பார்வையாளர் கருத்துரைப்பு அங்கத்தில் பொங்கோல் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுத் துணைத் தலைவர் முஜீப் கலந்துகொண்டு கருத்துரைத்தார். தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த திரு வ.கருணாநிதி, கவிதையோடு தம்முடைய கருத்துகளைப் பகிர்ந்தார். 

சிறார் பிரிவில் பேசிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறார் பிரிவில் பேசிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறார் பிரிவில் பேசிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. - படம்: வாழ்வியல் இலக்கியப் பொழில்

அக்டோபரில் பிறந்தநாள் கொண்டாடுவோருக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

குறிப்புச் சொற்கள்
சமூகம்இலக்கியம்தமிழ்