கேலாங் சிராய் தீபாவளிக் கொண்டாட்டம் 2024

1 mins read
cd587eae-56ef-49aa-b166-0238c2d57556
சிங்கப்பூரின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் விதமாக சீன, மலாய் சமூகத்தினரின் கலாசார இசை, நடனக் கச்சேரி நிகழ்ச்சிகளை கேலாங் சிராய் குடியிருப்பாளர்கள் கண்டு ரசித்தனர். - படம்: கேலாங் சிராய் சமூக மன்றம்

கேலாங் சிராய் சமூக மன்றத்தில் நவம்பர் 17ஆம் தேதி கிட்டத்தட்ட 350 பேர் ஒன்றுகூடி அங்கு நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

கேலாங் சிராய் இந்தியர் நற்பணிச் செயற்குழுவுடன் கேலாங் சிராய் மகளிர் செயற்குழுவும் தஞ்சோங் காத்தோங் குடியிருப்பாளர்களின் கட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், தென்கிழக்கு வட்டார மேயரும் மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபஹ்மி அலிமான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சிங்கப்பூரின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் விதமாக சீன, மலாய் சமூகத்தினரின் கலாசார இசை, நடனக் கச்சேரி நிகழ்ச்சிகளை கேலாங் சிராய் குடியிருப்பாளர்கள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களின் மேடை நிகழ்ச்சிகளும் மருதாணியிடுதல் போன்ற நடவடிக்கைகளும் ஆடையலங்காரப் போட்டியும் விளையாட்டுகளும் இடம்பெற்றன.

“குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து ஒரே சமூகமாகக் கொண்டாடுவதற்கும் சமூகப் பிணைப்பை ஊக்குவிப்பதற்கும் இவ்வாண்டின் கேலாங் சிராய் தீபாவளிக் கொண்டாட்டம் ஒரு தளமாக அமைந்தது என நம்புகிறோம்,” என்றார் கேலாங் சிராய் சமூக மன்ற இந்­தி­யர் நற்­பணிச் செயற்குழுத் தலை­வர் முகம்­மது மாலிக் கஞ்சா சபா.

குறிப்புச் சொற்கள்