சிங்கப்பூரில் கோபிநாத்: ‘நீயா நானா’ நேரடி விவாதம்

சிங்கப்பூரில் கோபிநாத்: ‘நீயா நானா’ நேரடி விவாதம்

1 mins read
45985b31-80a6-483c-8980-b1f3ec8afab6
நீயா நானா நிகழ்ச்சி சிங்கப்பூரில் - படம்: யெஸ் மீடியா

இந்தியத் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சமூக விவாத நிகழ்ச்சியான ’நீயா நானா’, அதன் தனித்துவமான நெறியாளர் கோபிநாத் சந்திரன் தலைமையில் சிங்கப்பூருக்கு நேரடியாக வருகை தருகிறது.

வரும் சனிக்கிழமை (ஏபரல் 18) அன்று சிங்கப்பூர் குவாண்டம் அரினாவில் (Quantum Arena) நடைபெறவுள்ள இந்த நேரடி நிகழ்ச்சியில், தலைமுறைகளைத் தாண்டிய ஒரு சுவாரசியமான தலைப்பு விவாதிக்கப்படவுள்ளது.

யெஸ் மீடியா ஒருங்கிணைப்பில், விஜய் டிவி, அபிராமி பாப்புலர் ஜுவல்லர்ஸ் ஆதரவில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விவாதக் களம்: 80s & 90s பாடல்கள் Vs 2K பாடல்கள்

இளையராஜாவின் மெல்லிசையும் ஏ.ஆர். ரகுமானின் மேஜிக்கும் நிறைந்த 80, 90களின் பாடல்களா? அல்லது இன்றைய நவீன தொழில்நுட்பமும் துள்ளலான இசையும் கலந்த 2K பாடல்களா? எது சிறந்தவை?

சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களின் உணர்வுகளையும் கருத்துகளையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த விவாதம் அமையவுள்ளது. கோபிநாத்தின் சுவாரசியமான கேள்விகளும், இரு தரப்புக்கும் இடையிலான அனல் பறக்கும் வாதங்களும் நடக்கவுள்ளன.

நிகழ்ச்சி விவரங்கள்:

நாள்: 18 ஏப்ரல் 2026 (சனிக்கிழமை)

நேரம்: மாலை 6:00 மணி

இடம்: குவாண்டம் அரினா (Quantum Arena), 27 பொங்கோல் ஃபீல்ட் வாக், சிங்கப்பூர் 828649

டிக்கெட் முன்பதிவு: [TicketNow.sg](https://ticketnow.sg/event/neeya-naana/123)

மேல் விவரங்களுக்கு: https://www.facebook.com/share/p/18Kcj1x6jo/

குறிப்புச் சொற்கள்