பட்டிமன்றப் பேச்சாளர் புலவர் இராமலிங்கம் வழங்கும் நகைச்சுவை சொற்பொழிவு

பட்டிமன்றப் பேச்சாளர் புலவர் இராமலிங்கம் வழங்கும் நகைச்சுவை சொற்பொழிவு

படம்: ஏற்பாட்டுக் குழுவினர்

08 Apr 2026 - 5:00 am

1 mins read

தமிழ்மொழி விழா 2026ன் ஓர் அங்கமாக வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) ஏற்பாட்டில் சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2026 மாலை 6 மணிக்கு, எண் 2, பீட்டி சாலையில் அமைந்துள்ள உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில், தொலைக்காட்சிப் புகழ், பிரபல பட்டிமன்றப் பேச்சாளர், நகைச்சுவை நாவலர் புலவர் மா. இராமலிங்கம் “ஈடுபடு… இமயம் தொடு!” எனும் தலைப்பில் நகைச்சுவை மிகுந்த சொற்பொழிவாற்றவிருக்கிறார்.

நாடாளுமன்ற நியமன உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்