தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய முஸ்லிம் பேரவை காஸாவுக்கு நன்கொடை

1 mins read
7bf5170f-f0af-45ff-b9c0-54899baeb4bf
இந்திய முஸ்லிம் பேரவையின் நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவியாக $15,400 நிதி திரட்டி வழங்கப்பட்டது. - படம்: இந்திய முஸ்லிம் பேரவை

இந்திய முஸ்லிம் பேரவையின் நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவியாக $15,400 நிதி திரட்டி வழங்கப்பட்டது.

பேரவையும், அதன் இணை அமைப்புகளும் திரட்டிய அந்த ரொக்கம் ரஹ்மான் லில் ஆலமீன் பவுன்டேஷன் தலைமை நிர்வாகி அத்னான் அப்துல் ஹமீதிடம் அளிக்கப்பட்டது. கடந்த மார்ச் 23 பென்கூலன் பள்ளிவாசல் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்ற (முயிஸ்) தலைமை நிர்வாகி ஹாஜி காதிர் மைதீன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்திய முஸ்லிம் அமைப்பினர், மலாய் முஸ்லிம் அமைப்பினர், தமிழ் அமைப்பின் நிர்வாகிகள் ஆதரவாளர்கள், தொண்டூழியர்கள் உள்ளிட்ட பலரும் ஒன்றாகக் கூடி, நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

இந்திய முஸ்லிம் பேரவையின் நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.
இந்திய முஸ்லிம் பேரவையின் நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். - படம்: இந்திய முஸ்லிம் பேரவை
குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்